ADVERTISEMENT

சென்னை டெஸ்டில் இதயங்களை வென்ற விராட்! (வீடியோ உள்ளே)

05:52 PM Feb 05, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

இந்தியா - இங்கிலாந்து இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி, இன்று தொடங்கியுள்ளது. சென்னையில் நடைபெறும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்தது.

இங்கிலாந்தின் தொடக்க ஆட்டக்காரர்கள், முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தனர். இதன்பிறகு இங்கிலாந்து அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இருப்பினும் கேப்டன் ஜோ ரூட்டும், டொமினிக் சிபிலியும் சிறப்பாக விளையாடி ரன்களைச் சேர்த்தனர். முதல்நாளின் கடைசி பந்தில் டொமினிக் சிபிலி, பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து முதல்நாள் ஆட்டநேர முடிவில், இங்கிலாந்து அணி 3 விக்கெட்டுகளை இழந்து 263 ரன்கள் எடுத்தது.

முன்னதாக இந்தப் போட்டியில் சதமடித்த ஜோ ரூட், காலில் தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். அப்போது இந்திய கேப்டன் விராட் கோலி, இங்கிலாந்து பிசியோதெரபிஸ்ட்கள் வரும்வரை, ஜோ ரோட்டின் காலை தூக்கிபிடித்தபடி நின்றார். விராட் கோலியின் இந்தச் செயலலைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT