ஒருநாள் அணி கேப்டன்ஷிப்பிலிருந்தும் விராட் கோலி விலகலாம் - ரவி சாஸ்திரி!

virat - shastri

இருபதுஓவர்உலகக் கோப்பைக்குப் பிறகு, இந்திய இருபது ஓவர் அணியின் கேப்டன்பொறுப்பிலிருந்து விலகுவதாகவிராட்கோலி அறிவித்திருந்த நிலையில், இந்திய அணி சூப்பர் 12 சுற்றோடு உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது. இதனைத்தொடர்ந்து இந்திய இருபதுஓவர்அணியின்கேப்டனாகரோகித்சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் ஆங்கில ஊடகம்ஒன்றுக்குப்பேட்டியளித்துள்ள ரவி சாஸ்திரி,விராட்கோலி ஒருநாள் அணிகேப்டன்சியிலிருந்துவிலகினாலும் விலகலாம்எனத்தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், "டெஸ்ட்கிரிக்கெட்டில்,விராட்கோலி தலைமையிலான இந்திய அணி, கடந்த 5 ஆண்டுகளாக உலகின் நம்பர் 1 அணியாக இருந்து வருகிறது. அதனால் அவராக விட்டுக்கொடுக்க விரும்பாதவரை அல்லது அவர்மனரீதியாகச்சோர்வடைந்து தனதுபேட்டிங்கில்கவனம் செலுத்த வேண்டும் எனநினைக்கும் வரை அவரேகேப்டனாகஇருப்பார். ஆனால் எதிர்காலத்தில் அவர்கேப்டன்சியைதுறக்கலாம். அது உடனடியாக நடக்கும் என்று நினைக்கவில்லை. ஆனால் இது நடக்கலாம்"எனதெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், "ஒருநாள்போட்டிகளிலும்இதுவே நடக்கலாம்.டெஸ்ட்கேப்டன்சியில்கவனம் செலுத்துவதற்காக ஒருநாள் அணிகேப்டன்சியைவிட்டு விலகுவதாக அவர் அறிவிக்கலாம். அவரது உடலும் மனதும்தான் அது குறித்து முடிவெடுக்கும்"எனகூறியுள்ளார்.

அதேபோல் இன்னொருஊடகத்திற்குப்பேட்டியளித்த ரவி சாஸ்திரி, அணி தேர்வு சம்பந்தமான கேள்விக்குப்பதிலளிக்கையில், அணி தேர்வில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்றும், போட்டியில் விளையாடும் 11பேரைத்தேர்வு செய்வதில்தான் தான் பங்கு வகித்ததாகவும் தெரிவித்துள்ளார். மேலும் அணி தேர்வில்கேப்டனுக்குகூட ஒட்டு இல்லை எனகூறியுள்ளார்.

Ravi Shastri team india virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe