Advertisment

சச்சினின் இரு சாதனைகளை ஒரே நாளில் முறியடித்த கோலி!

Virat Kohli who accumulated the most runs; Sachin's record breaking record

ஒரேபோட்டியில் சச்சினின் இரண்டு சாதனைகளை முறியடித்து உலக சாதனை படைத்துள்ளார்கோலி.

Advertisment

மும்பை வான்கேடே மைதானத்தில் நடைபெற்று வரும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.அதிரடியாக ஆடிய ரோஹித் 28 பந்துகளில் 47 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தமற்றொரு தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில், காயம் காரணமாக ஆட்டத்தை விட்டு பாதியில் வெளியேறினார். 65 பந்துகளை சந்தித்த கில் 79 ரன்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.

Advertisment

இந்நிலையில் அடுத்து வந்த விராட் கோலி நிதானமாக ஆடினார். அரை சதம் கடந்த கோலி80 ரன்கள் எடுத்த நிலையில் இந்த உலக கோப்பை தொடரில் மொத்தமாக 674 ரன்களை குவித்தார். இதன் மூலம் கடந்த 2003 ஆம் ஆண்டு நடைபெற்ற உலககோப்பை தொடரில் சச்சின் டெண்டுல்கர் 11 போட்டிகளில் குவித்த673 ரன்கள் எனும் சாதனையை முறியடித்தார்.ஒரு நாள் உலகப்கோப்பை தொடரில் ஏறத்தாழ 20 ஆண்டுகாலசாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.தொடர்ந்து சிறப்பாகஆடிய கோலி சதத்தை கடந்தார். இதன் மூலம் சச்சினின் மற்றொரு சாதனையான ஒரு நாள் போட்டிகளில் அதிக சதம் (49) விளாசிய வீரர் எனும் சாதனையையும் முறியடித்து 50 ஆவது சதத்தை கடந்துள்ளார். தொடர்ந்து ஆடிய கோலி 117 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி 45 ஓவர்களில் 341-2 என ஆடி வருகிறது.ஸ்ரேயாஸ் 90ரன்களுடனும், ராகுல் 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.

cricket India Newzealnd
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe