ADVERTISEMENT

'இன்னும் 23 ரன்கள்'... சச்சின் சாதனையை முறியடிக்கவிருக்கும் விராட் கோலி!

01:14 PM Dec 01, 2020 | sivar@nakkheeran.in

ADVERTISEMENT

ADVERTISEMENT

இன்னும் 23 ரன்கள் எடுப்பதன்மூலம் ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 12,000 ரன்கள் எடுத்தவீரர் என்ற சாதனையை இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி படைக்க இருக்கிறார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரை, நடந்து முடிந்த இரு போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி கைப்பற்றியது. இதனையடுத்து, மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறுகிறது. இப்போட்டியில், இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சினின் சாதனையை விராட் கோலி முறியடிக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.

இதுவரை 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி, 43 சதங்கள், 53 அரை சதங்களுடன் 11,977 ரன்கள் குவித்துள்ளார். இன்னும் 23 ரன்கள் எடுப்பதன்மூலம் 12,000 ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி ஆறாவது வீரராக இணையவுள்ளார். இச்சாதனையைப் படைக்க சச்சின் 309 போட்டிகள் எடுத்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT