கேப்டன் பதவியிலிருந்து விலக மறுத்த விராட் கோலி?

virat kohli

இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் 20 ஓவர் அணிகளின் கேப்டனாக இருந்து வந்த விராட் கோலி, இருபது ஓவர் உலககோப்பைக்குபிறகு இந்தியாவின் இருபது ஓவர் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகினார். இதனைத்தொடர்ந்து இந்தியாவின் இருபது ஓவர் அணி கேப்டனாக ரோகித் சர்மா நியமிக்கப்பட்டார்.

இந்தசூழலில்,இந்தியகிரிக்கெட் வாரியத்தின் நிர்வாகிகள், தற்போது இருபது ஓவர் அணியின் கேப்டனாக இருக்கும் ரோகித் சர்மாவேஒருநாள் அணிக்கும் கேப்டனாக இருக்கவேண்டும் என கருதுவதாகவும், அதுகுறித்து இந்தியா- தென்னப்பிரிக்கா அணி தேர்வு செய்யப்படும்போது தேர்வுக்குழுவிவாதிக்கபோவதாகவும்தகவல் வெளியானது.

இந்தநிலையில்நேற்றுதென்னப்பிரிக்காடெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை அறிவித்த தேர்வு குழு, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவைநியமிக்க முடிவு செய்துள்ளதாக அதிரடியாக அறிவித்தது. இந்தநிலையில்விராட் கோலி தானாகவே ஒருநாள்போட்டியின் கேப்டன் பதவியிருந்துவிலகுவதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் 48 மணிநேரம்அவகாசம் அளித்ததாகவும், இருப்பினும் விராட் கோலி பதவியிலிருந்து விலகாமல்பிடிவாதமாக இருந்த காரணத்தினால் அவரைஇந்திய கிரிக்கெட் வாரியமே நீக்கியுள்ளதாகவும்தகவலறிந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

bcci Rohit sharma team india virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe