Skip to main content

டிவில்லியர்ஸ் போல செய்து அசத்திய விராட் கோலி!!!

 

rcb

 

2018 -ஆம் ஆண்டு எல்லைக்கோட்டிற்கு அருகே நின்று டிவில்லியர்ஸ் கேட்ச் செய்தது போல விராட் கோலி தற்போது செய்து அசத்தியுள்ளார்.

 

விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி வரும் 21 -ஆம் தேதி தன்னுடைய முதல் போட்டியில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் மோதுகிறது. தற்போது அதற்கான தீவிர பயிற்சியில் பெங்களூர் அணி வீரர்கள் உள்ளனர். பயிற்சியின் ஒரு பகுதியாக ஃபீல்டிங் பயிற்சியில் ஈடுபடும் போது, விராட் கோலி எல்லைக்கோட்டிற்கு அருகே நின்று ட்வில்லியர்ஸ் போல கேட்ச் செய்து அசத்தினார்.

 

பெங்களூர் அணியின் நட்சத்திர வீரரான ட்வில்லியர்ஸ், கடந்த 2018 -ஆம் ஆண்டு நடைபெற்ற ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில், எல்லைக்கோட்டிற்கு அருகே நின்று ஹைதராபாத் அணி வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் தூக்கி அடித்த பந்தை லாவகமாக கேட்ச் செய்தார். அந்த கேட்ச்சானது அந்தச் சமயத்தில் சூப்பர் மேன் கேட்ச் என்று சமூக வலைத்தளத்தில் பெரிதும் கொண்டாடப்பட்டது. அதே போல தற்போது விராட் கோலி கேட்ச் செய்து அசத்திய புகைப்படத்தை, அந்த அணி நிர்வாகம் தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிந்துள்ளது.  

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்