Advertisment

"புத்திசாலிகள்.. பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தினார்கள்" - சென்னை ரசிகர்களை புகழ்ந்து தள்ளிய விராட் கோலி!

virat kohli

இந்தியா - இங்கிலாந்து இடையேயான இரண்டாவது டெஸ்ட்போட்டி, சென்னையில் நடைபெற்றது. கரோனாதொற்று கட்டுப்பாடுகளுக்குப் பிறகு, இந்தப் போட்டியில்தான் ரசிகர்களுக்கு அனுமதி (50 சதவீதம்) வழங்கப்பட்டது. இந்தப் போட்டியில் முதல் நாளிலிருந்தே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி, இங்கிலாந்து அணியை317 ரன்கள்வித்தியாசத்தில் வீழ்த்தியது.

Advertisment

இப்போட்டியில் அஷ்வின்இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்ததோடு, இரண்டு இன்னிங்க்ஸிலும் சேர்த்து 8 விக்கெட்டுகளைவீழ்த்திஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். போட்டிக்குப் பிறகு பேசியஇந்தியக் கேப்டன்விராட்கோலி, போட்டியைக் காண மைதானத்திற்கு வந்திருந்த ரசிகர்களைப் புகழ்ந்து தள்ளினார்.

Advertisment

இதுதொடர்பாக அவர், "முதல் ஆட்டத்தில், பார்வையாளர்கள் இல்லாமல் சொந்த மண்ணில் விளையாடுவது சற்றுவித்தியாசமாக இருந்தது. உண்மையைச் சொல்ல வேண்டுமானால் முதல் இரண்டு நாட்கள், என்னையும் சேர்த்து, சோர்வாகஇருந்தோம். யாரும்எனர்ஜியோடு இல்லை. முதல் ஆட்டத்தின் இரண்டாவது இன்னிங்க்ஸில் இருந்து நாங்கள் எங்கள் ஆட்டத்தை விளையாடினோம். உடல்மொழியிலும், நாங்கள் களத்தில் என்ன செய்ய விரும்புகிறோம் என்பதிலும்சரியாக இருந்தோம்.ஆனால் இந்த ஆட்டத்தில், ரசிகர் கூட்டம் ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியது எனநான் நினைக்கிறேன். ரசிகர்கள் உங்களுக்குப் பின்னால் இருக்கும்போது, நீங்கள் ஒரு அணியாக அதிகமாக உந்தப்படுவீர்கள். இந்த ஆட்டம் நாங்கள் வெளிப்படுத்தும் மன உறுதிக்குச் சான்றாகும். நாங்கள் அதைத் தொடர்ந்து செய்வோம். அதில்ரசிகர்களின் ஆதரவுக்குப் பெரும் பங்குண்டு" எனக் கூறினார்.

மேலும் விராட்கோலி, “சென்னைரசிகர்கள் புத்திசாலிகள்.அவர்கள் எங்கள் கிரிக்கெட்டை நன்றாக புரிந்துகொள்கிறார்கள். பந்து வீச்சாளருக்கு ரசிகர்களின் ஆதரவு தேவைப்படும் 15 - 20 நிமிட காலகட்டத்தில், அனைவரையும்அதில்ஈடுபடுத்துவது எனது பொறுப்பு. இந்த வெப்பத்தில் நான் பந்துவீச ஓடினால், என்னை ஊக்குவிக்க மக்கள் தேவை. இது எங்களுக்கு சரியான ஆட்டமாக அமைந்தது”எனவும்தெரிவித்தார்.

Test cricket Chennai INDIA VS ENGLAND virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe