Advertisment

தன்னுடைய கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை தொட்ட விராட் கோலி!

virat kohli

Advertisment

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடியதன் மூலம் 250 போட்டிகளில் விளையாடிய இந்திய வீரர்கள் என்ற பட்டியலில் விராட் கோலி இணைந்துள்ளார்.

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் முதல் இரு போட்டிகளில் வென்ற ஆஸ்திரேலிய அணி, ஒருநாள் தொடரைக் கைப்பற்றியுள்ளது. கடைசியாக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 250-ஆவது போட்டியாகும்.

2008 -ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான போட்டியில் அறிமுகமாகிய விராட் கோலி தன்னுடைய 12 ஆண்டு கால கிரிக்கெட் வரலாற்றில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இவர் இப்பட்டியலில் இணைந்த 9 -ஆவது வீரராகும்.

Advertisment

இப்பட்டியலில் சச்சின், தோனி, டிராவிட் முறையே 463, 347, 340 போட்டிகளில் விளையாடி முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

india vs Australia virat kohli
இதையும் படியுங்கள்
Subscribe