இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு இடையேயான முதலாவதுஇருபது ஓவர்போட்டி இன்று நடைபெற்றது. இதில், டாஸ்வென்றஆஸ்திரேலியா, முதலில் பந்துவீச்சைதேர்ந்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி, கே.எல். ராகுல்மற்றும் ஜடேஜாவின் அதிரடியால் இந்தியஅணி 161 ரன்களைக் குவித்தது.
இதனைத் தொடர்ந்து, ஆடியஆஸ்திரேலியாவின் பேட்ஸ்மேன்களை,நடராஜனும், ஜடேஜாவிற்குமாற்று வீரராகஇறங்கியசாஹலும் தங்களது அபாரபந்துவீச்சால்சாய்த்தனர். அதன்காரணமாக, இந்திய அணி, ஆஸ்திரேலியாவை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
வெற்றிக்குப் பிறகு பேசியகேப்டன்விராட்கோலி, இந்தப் போட்டியில்சாஹலைவிளையாடவைக்கும் திட்டமேஇல்லை. கன்கஷன் சப்ஸ்டியூட் (மாற்று வீரரை இறக்கும்முறை) என்பதுபுதிரான ஒன்று. அது இன்று எங்களுக்குச் சாதகமாகஅமைந்தது. சஹால், எதிரணியைக் கசக்குவதற்கான தீவிரத்தைக் காட்டினார். அவரால்,ஆஸ்திரேலியா அணிசிறப்பானதொடக்கம் கண்டார்கள் எனநினைக்கிறேன். அவர்கள் வெற்றியைநோக்கி வேகமாக முன்னேறினார்கள்.
ஆனால், அவர்களின்பேட்ஸ்மேன்களே எங்களுக்குச் சிலவிக்கெட்டுகளை தாரைவார்த்துவிட்டார்கள். அதுதான்20 ஓவர் கிரிக்கெட்.ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது, நீங்கள் இறுதிவரைகடுமையாக விளையாடவேண்டும் அதுமட்டுமில்லாமல், வெற்றிபெறவேண்டும் என்ற எண்ணத்தை தொடர்ந்து வெளிக்காட்டிக் கொண்டிருக்க வேண்டும். நடராஜனால், மேலும் தன்னை மேம்படுத்திக்கொள்ள முடியும். சாஹரும் நன்றாகப் பந்து வீசினார். சஹால், இந்தப் போட்டிக்குள் இந்தியாவைத் திரும்பக் கொண்டுவந்தார். ஹர்திக்கின் கேட்ச்தான் மேட்ச்சை மாற்றியது" எனக் கூறினார்.