ஆஸ்திரேலியாவிற்கெதிரான முதலாவதுடெஸ்ட்போட்டியில் முன்னிலையில் இருந்த இந்திய அணி, பேட்ஸ்மேன்களின் மோசமான ஆட்டத்தால் படுதோல்வியை சந்தித்தது.
தோல்விக்கு பிறகு பேசியஇந்தியஅணி கேப்டன்விராட்கோலி, பேட்ஸ்மேன்கள் இன்டென்ட் இல்லாமல் ஆடியதால் தோல்வியைசந்த்திதாகவும், இரண்டு நாள் நன்றாக ஆடிவிட்டுஒரு மணிநேரத்தில்தோற்று விட்டதாகவும் கூறினார்.
தோல்வி குறித்துஅவர் "அந்த எண்ணங்களை வார்தைகளால் விவரிப்பது மிகவும் கடினம். நாங்கள் 60 ரன்கள்முன்னிலையொடு இருந்தோம். அங்கிருந்து சரிந்துவிட்டோம். இரண்டு நாட்களாக நன்றாக ஆடி, நல்ல நிலையில் இருந்தோம். ஆனால் ஒரு மணிநேரத்தில் அதனை இழந்துவிட்டோம். இது உண்மையாகவே வேதனைபடுத்துகிறது. இன்று பேட்டிங்கில் இன்டென்ட் இல்லை. அது பிரதிபலிக்கப்படவேண்டிய ஒன்று. முதல் இன்னிங்ஸிலும் இதேபோல் பந்து வீசினார்கள். அப்போது எங்கள் நோக்கம் ரன்கள்எடுப்பதாக இருந்தது. பாக்ஸிங் டேபோட்டியில், வீரர்கள்இன்டென்ட்டோடு விளையாடி, வெற்றிபெறுவர்கள் எனநம்புகிறேன்" எனகூறியுள்ளார்.