Skip to main content

கே.எல்.ராகுலுக்கு பி.எம்.டபில்யூ காரை பரிசளித்த விராட் கோலி

 

Virat Kohli gifted a BMW car worth 2 cr to KL Rahul at his wedding

 

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராகவும், அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் இருந்து வருகிறார் கே.எல். ராகுல். பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டியின் மகளும், நடிகையுமான அதியா ஷெட்டியும் கே.எல். ராகுலும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். இவர்கள் இருவருக்கும் கடந்த 23 ஆம் தேதி மஹாராஷ்டிராவில் உள்ள பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமண நிகழ்வில் மணமக்களின் இரு வீட்டார் மட்டுமே கலந்துகொண்டனர். 

 

இந்நிலையில் இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி திருமண வாழ்த்து தெரிவித்து, ரூ. 2 கோடி மதிப்பிலான பி.எம்.டபில்யூ  காரை பரிசளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருமணத்திற்கு யாரையும் அழைக்காததால், வரவேற்பு நிகழ்வு வெகு விமரிசையாக கே.எல்.ராகுல் நடத்த திட்டமிட்டுள்ளாராம். அதில் திரைப் பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என பல முக்கிய நபர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

இதை படிக்காம போயிடாதீங்க !