Advertisment

முதற்கட்ட பயிற்சி சிறப்பாக அமைந்தது -விராட் கோலி 

virat kohli

Advertisment

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13 வது ஐபிஎல் தொடர் அடுத்த மாதம் 19ம் தேதி தொடங்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் இத்தொடருக்காக அனைத்து அணி வீரர்களும் தற்போது உற்சாகமாக தயாராகி வருகின்றனர். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அமீரகம் வந்தடைந்த வீரர்கள் அங்கு ஆறு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனைக்குப் பின்னரே பயிற்சி மேற்கொள்ள அனுமதிக்கப்படுகின்றனர். தற்போது பெரும்பாலான அணி வீரர்கள் தங்கள் தனிமைப்படுத்தலை நிறைவு செய்துள்ளனர். அதனையடுத்து அவர்கள் உற்சாகமாகபயிற்சியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இந்திய அணியின் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் அணி கேப்டனுமானவிராட் கோலி தன்னுடைய பயிற்சியைத் தொடங்கியுள்ளார். முதல் நாள் பயிற்சியை முடித்துவிட்டு அது குறித்து தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "மைதானத்தில் கால் வைத்து 5 மாதங்கள் ஆகிவிட்டன. வலைப்பயிற்சிக்காக தயாராகும் போது ஆறு நாட்களே ஆனது போல உள்ளது. பெங்களூரு அணி வீரர்களுடன் முதற்கட்ட பயிற்சி சிறப்பாக இருந்தது" எனப் பதிவிட்டுள்ளார்.

virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe