virat - dhoni

Advertisment

சர்வதேச கிரிக்கெட்வாரியம் கடந்த 10 ஆண்டுகளில் சிறந்தவீரர்களைத்வைத்து, தசாப்தத்தின் கனவுஒரு நாள், டெஸ்ட், மற்றும் 20 ஓவர்அணிகளைவெளியிட்டது. இந்த அணிகளில் இந்தியவீரர்கள்ஆதிக்கம் செலுத்தினர்.

இந்தநிலையில் சர்வதேச கிரிக்கெட்வாரியம், இந்த தசாப்தத்தின் சிறந்தவீரர், சிறந்த ஒரு நாள் போட்டி வீரர், சிறந்தடெஸ்ட் வீரர் மற்றும் சிறந்த அறிமுக வீரர் ஆகியோர்களை தேர்வு செய்து இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதில் இந்த தசாப்தத்தின் சிறந்த வீரருக்கான சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதுக்கு விராட்கோலிதேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் தசாப்தத்தின் சிறந்தஒரு நாள் போட்டி வீரருக்கானவிருதையும் விராட்வென்றுள்ளார். தசாப்தத்தின் சிறந்தடெஸ்ட்வீரராக ஸ்டீவ் ஸ்மித் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் 20 ஓவர்போட்டிகளில்சிறந்த அறிமுக வீரராகரஷீத்கான்தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் அறத்துடன் விளையாடிய விருதுக்குதோனி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். கடந்த 2011 ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட்போட்டியில், ரன்அவுட்டானஇயான்பெல்லைதிரும்ப பேட்டிங் செய்ய அழைத்ததற்காக இந்த விருதுக்குதோனி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Advertisment

ellyse perry

மகளிர் கிரிக்கெட்டில், கடந்த தசாப்தத்தின் சிறந்தவீராங்கனை, சிறந்தஒருநாள் மற்றும் இருபது ஓவர்வீராங்கனை ஆகிய மூன்றுவிருதுகளையும் ஆஸ்திரேலியாவின் ஆல்ரவுண்டர் எல்லிஸ் பெர்ரிவென்று சாதனைபடைத்துள்ளார்.