anushka sharma

Advertisment

சர்வதேச மகளிர் தினம், ஆண்டு முழுவதும் மார்ச் எட்டாம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்மையைப் போற்றும் விதமாக மட்டுமில்லாமல், பாலின சமத்துவம் குறித்த விழிப்புணர்வைஏற்படுத்தவும், பெண்களின் சாதனையைக் கொண்டாடும் வகையிலும்இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இன்று மகளிர் தினம் கொண்டாடப்படுவதையடுத்து இந்தியக் கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலி, தனது மனைவி அனுஷ்கா சர்மா தங்கள் குழந்தையுடன் இருக்கும் அழகான புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு, அழகான செய்தி ஒன்றையும் பதிவிட்டுள்ளார். தற்போது அந்தப் புகைப்படமும், செய்தியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விராட் கோலி வெளியிட்டுள்ள பதிவில், “குழந்தையின் பிறப்பைப் பார்ப்பது ஒரு மனிதனுக்கு முதுகுத்தண்டை சில்லிட வைக்கும், நம்பமுடியாத மற்றும் ஆச்சரியமான அனுபவமாகும். அதனைப் பார்த்த பிறகு, பெண்களின் உண்மையான வலிமையையும் தெய்வீகத்தன்மையையும், கடவுள்அவர்களுக்குள் ஏன் உயிரைப் படைத்தார் என்பதையும் நீங்கள் புரிந்துகொள்வீர்கள். அது ஏனென்றால் அவர்கள் ஆண்களாகிய நம்மைவிட வலிமையானவர்கள். என் வாழ்க்கையின் மிகவும் சக்திமிக்க, இரக்கமுள்ள மற்றும் வலிமையான பெண்ணுக்கும், தனது தாயைப் போல வளரப்போகிறவளுக்கும், உலகின் அனைத்து அற்புதமான பெண்களுக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்" எனக் கூறியுள்ளார்.