Advertisment

கிரிக்கெட்டுக்கு ஒரு ரொனால்டோ.. கோலிதான்! - பிராவோ புகழாரம்

கிரிக்கெட்டுக்கு ஒரு கிறிஸ்டியானோ ரொனால்டோ இருப்பார் என்றால் அது கோலி மட்டுமே என மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர் ட்வெய்ன் பிராவோ புகழாரம் சூட்டியுள்ளார்.

Advertisment

Virat

விராட் கோலி நடத்திய விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய மேற்கிந்தியத் தீவுகள் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ட்வெய்ன் பிராவோ, ‘விராட் கோலி என் தம்பி டேர்ரன் பிராவோவுடன் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். நான் டேர்ரனிடம் விராட் கோலி சிறந்த மனிதர், அவரோடு பேசும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொள் எனக் கூறியிருக்கிறேன். நான் இங்கிருக்கிறேன் என்பதால் இதைக் கூறவில்லை; விராட் கிரிக்கெட் மற்றும் பேட்டிங் குறித்து நிறையவே என் தம்பியுடன் பகிர்ந்திருக்கிறார்’ எனக் கூறினார்.

Advertisment

மேலும், ‘நான் விராட் கோலியை கிரிக்கெட்டின் ரொனால்டோவாகவே பார்க்கிறேன். அவர் அந்த பெருமைகளுக்கு ஒப்பானவர். இந்தியா அல்லது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக கோலி விளையாடும்போது, ஒரு கிரிக்கெட் வீரனாக அவரை எதிர்த்து விளையாடி இருக்கிறேன். அவரது திறமை, அவர் விளையாட்டின் மூலமாக வெளிப்படும் அதீத ஆர்வம்என அனைத்தையும் பார்த்து வியந்திருக்கிறேன். அவருக்காக சொல்லப்படும் எல்லா பாராட்டுகளுக்கும் அவர் உரியவர்தான்’ என புகழ்ந்து பேசினார்.

கால்பந்தாட்ட உலகில் சமகாலத்தில் முடிசூடா மன்னனாக திகழ்பவர் போர்ச்சுகல் நாட்டு கால்பந்தாட்ட வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீரர்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆதர்சமான வீரராக இருக்கும் ரொனால்டோ தொடர்ந்து பல சாதனைகளைப் படைத்து வருகிறார். அத்தகைய ஒருவரோடு விராட் கோலியை ஒப்பிட்டு பேசியிருப்பது பல தரப்பிலும் கவனத்தைப் பெற்றுள்ளது.

Christiano Ronaldo Dwayne Bravo indian cricket virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe