Advertisment

இங்கிலாந்துக்கு எதிரான தொடர்: ஓப்பனர்கள் யார்? - விராட் கோலி பதில்!

rohit - kl - dhawan - vk

Advertisment

இங்கிலாந்து கிரிக்கெட் அணி, இந்தியாவில்சுற்றுப்பயணம் செய்து விளையாடிவருகிறது. ஏற்கனவே, நடந்த டெஸ்ட் தொடரை 3-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. இதனைத் தொடர்ந்து, நாளை முதல் இரு அணிகளுக்கும் இடையேயானஐந்து போட்டிகள் கொண்ட இருபது ஓவர் போட்டித் தொடர் நடைபெறவுள்ளது.

ரோகித், தவான், கே.எல் ராகுல் ஆகியோர் இந்திய அணியில் இடம்பெற்றிருப்பதால், இந்த தொடரில் யார், யார் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராகக் களமிறங்குவர் என்ற கேள்வி எழுந்தது. இந்தநிலையில், இருபது ஓவர் தொடரையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்த விராட் கோலி, இந்த கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.

தொடக்க ஆட்டக்கார்கள்குறித்தகேள்விக்குப் பதிலளித்த விராட், "இது மிகவும் எளிது. ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர். ஷிகர் தவான் பேக்-அப்பாக இருப்பார். இந்த தொடருக்கு ரோகித் - கே.எல்.ராகுல் எங்களதுதொடக்க ஆட்டக்காரர்களாக இருப்பார்கள்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment

காயம் காரணமாக நீண்ட நாட்களுக்குப் பிறகு அணிக்கு வரும் புவனேஸ்வர் குமார் குறித்து பேசிய விராட் கோலி, அவர் திரும்ப வருவது மகிழ்ச்சி. இந்தியாவின் மேலும் பல வெற்றிகளுக்குப் பங்களிக்கஅவர் ஆர்வமாக உள்ளார். அவர் இங்கிருந்துவலிமையாக உருவாவார்என நம்புகிறேன்" எனக் கூறியுள்ளார்.

virat kholi Shikar Dhawan KL Rahul Rohit sharma team india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe