Advertisment

ஒரே நாளில் இத்தனை சாதனைகளா..! பிராட்மேன் முதல் சச்சின் சாதனை வரை அடித்து துவம்சம் செய்த கோலி...

இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது.

Advertisment

virat kohli breaks don bradman and sachin records in test cricket

இதில் இரண்டாம் நாள் ஆட்டமான இன்று இந்திய அணி வலுவான நிலையில் உள்ளது. இன்று ஆட்டம் தொடங்கியதும் களத்திற்கு வந்த இந்திய அணியின் கேப்டன் கோலி, நிதானமான சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சிறப்பாக விளையாடிய கோலி இந்த போட்டியில் தனது 7 ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் அதிக இரட்டை சதங்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி நான்காம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்திய வீரர் சச்சின், டெஸ்ட் போட்டிகளில் 6 இரட்டை சதங்கள் அடித்ததே, இதுவரை ஒரு இந்திய வீரரின் அதிகபட்ச டெஸ்ட் இரட்டை சத எண்ணிக்கையாக இருந்தது. இதனை தற்போது கோலி முறியடித்துள்ளார். இந்த பட்டியலில் டான் பிராட்மேன் 12 இரட்டை சதங்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

இதுமட்டுமல்லாமல் இந்த போட்டியில் கோலி 150 ரன்களை கடந்தது மூலம், ஒரு அணியின் டெஸ்ட் கேப்டனாக அதிக முறை 150 ரன்கள் அடித்த வீரர் என்ற டான் பிராட்மேனின் சாதனையை முறியடித்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் பிராட்மேன் கேப்டனாக இருந்த போது 8 முறை 150 ரன்களை குவித்துள்ளார். இன்றைய போட்டியில் 150 ரன்கள் அடித்ததன் மூலம் 9 ஆவது முறையாக 150 ரன்களை கடந்து கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் 7000 ரன்களையும் அவர் இன்று கடந்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் தனது அதிகபட்ச ஸ்கோரையும் கோலி இன்று மாற்றியமைத்துள்ளார். இதற்கு முன் டெஸ்ட் போட்டிகளில் அவரது அதிகபட்ச ரன் 243 ஆக இருந்த நிலையில் இன்றைய ஆட்டத்தில் 254 ரன்கள் விளாசியுள்ளார்.ஒரே நாளில் கோலி படைத்த இத்தனை சாதனைகளால் உற்சாகமடைந்துள்ள ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர்.

virat kohli team india
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe