ஐ.பி.எல் போட்டிகளுக்காக அமீரகத்தில் முகாமிட்டிருக்கும் பெங்களூரு அணியின் கேப்டனான விராட் கோலி, இன்று தன்னுடைய 32-ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். அங்கு அவர் தன்னுடைய மனைவி அனுஷ்கா ஷர்மா மற்றும் பெங்களூரு அணியின் சக வீரர்களோடு இணைந்து கேக் வெட்டிக் கொண்டாடினார். இதனையடுத்து, அவருக்குப் பல்வேறு தரப்பினரும் பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின், தன்னுடைய வாழ்த்துப் பதிவில், "பிறந்தநாள் வாழ்த்துகள் விராட் கோலி. வரவிருக்கும் தொடர்களுக்கு வாழ்த்துகள். தொடர்ந்து பலருக்கு உத்வேகம் அளியுங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் தன்னுடைய வாழ்த்துப் பதிவில், "ரன் பசி தொடரட்டும். எந்த விஷயத்தைச் செய்தாலும் அதில் புதிய உயரத்தைத் தொட வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
பெங்களூரு அணி நிர்வாகம் தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கத்தில், விராட் கோலியின் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளது.
How it started ➡️ how it ended ?
Captain Kohli’s birthday celebration was as smashing as his batting! ?@imVkohli#PlayBold#WeAreChallengers#HappyBirthdayViratKohlipic.twitter.com/sWsuNJHxse
— Royal Challengers Bangalore (@RCBTweets) November 5, 2020