இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலியும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா ஷர்மாவும் 2017ம் ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணம் இத்தாலியில் நடைபெற்றது. தற்போது அனுஷ்கா ஷர்மா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தான் கர்ப்பமாக இருக்கும் தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர், விராட்கோலி, அனுஷ்கா ஷர்மா இருவரும் சேர்ந்து எடுத்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்து இனி நாங்கள் மூன்று பேர். 2021 ஜனவரியில் குழந்தை பிறக்க இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். தற்போது அவரது ட்விட் இணையத்தில் நிறைய பேரால் பகிரப்பட்டு வருகிறது.