virat

Advertisment

இந்திய கிரிக்கெட் அணிக்குமூன்று விதமான போட்டிகளிலும் விராட் கோலி கேப்டனாக இருந்து வருகிறார். இந்தச் சூழலில் அவர், தனது பேட்டிங்கில் கவனம் செலுத்துவதற்காக ஒருநாள்மற்றும் இருபது ஓவர் அணிகளின் கேப்டன் பதவியைத் துறக்கவுள்ளதாகதகவல் வெளியானது.

ஆனால் இதனைபிசிசிஐ பொருளாளர் அருண் துமால், திட்டவட்டமாக மறுத்தார். இந்தநிலையில்விராட் கோலி, நடைபெறவுள்ள 20 ஓவர் உலககோப்பைக்குபிறகு, இந்திய 20 ஓவர் அணியின்கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இந்த முடிவை எடுக்க நீண்ட காலம் தேவைப்பட்டதாக தெரிவித்துள்ள விராட் கோலி, தனக்கு நெருக்கமானவர்களோடும், ரோகித் ஷர்மா மற்றும் ரவி சாஸ்திரியோடும் ஆலோசித்த பிறகு இந்த முடிவை எடுத்திருப்பதாகவும், இந்த முடிவு குறித்து இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா, தலைவர் கங்குலி மற்றும் தேர்வு குழுவினரிடமும்இதுதொடர்பாகபேசியதாகவும் தெரிவித்துள்ளார்.