Advertisment

நீலம் தான் எப்போதும் எங்கள் கலர்- புது ஜெர்ஸி குறித்து கோலி விமர்சனம்...

உலகக் கோப்பை தொடரில் அடுத்த போட்டியில் இந்திய அணி இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இதில் இரு அணிகளும் நீல ஜெர்ஸி பயன்படுத்த கூடாது என்ற விதியினால் இந்திய அணிஆரஞ்சு நிற புதிய ஜெர்ஸியை அணிந்து விளையாடுகிறது. இந்திய அணியின் இந்த புதிய அதிகாரபூர்வ ஜெர்ஸி ஸ்பான்சர்களான நைக் நிறுவனத்தால் வெளிக்கிழமை வெளியிட்டுள்ளது.

Advertisment

virat kohli about team india's new orange jersy

இந்த புதிய ஜெர்ஸிக்கு ரசிகர்கள் கலவையான விமர்சனங்கள் தெரிவித்து வரும் நிலையில், இதுகுறித்து கோலிதனது கருத்துக்களை கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், "இந்த வண்ணம் எனக்கு பிடித்திருக்கிறது. ஒரு போட்டிக்கு மட்டும் என்பதால் இது ஓ.கே தான். நிரந்தரமாக இந்த வண்ணமே இருக்காது என நம்புகிறேன். எப்போதுமே நீலம் தான் நமது வண்ணம். அதனை அணிவது தான் பெருமை. இந்த ஆட்டத்திற்கு மட்டும் என பார்க்கும் போது, இது நன்றாக இருக்கிறது" என கூறியுள்ளார். இந்நிலையில் கோலியின் எண்ணமும் ரசிகர்களின் எண்ணங்களை பிரதிபலிப்பது போலவே உள்ளது என இணையத்தில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறது.

Advertisment

icc worldcup 2019 team india virat kohli
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe