Advertisment

சச்சினை தோளில் சுமந்தது ஏன்...!!! நினைவுகளை பகிரும் விராட்கோலி...

sachin

Advertisment

2011ம் ஆண்டு 'இந்தியா - இலங்கை' அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. அதில் இந்திய அணி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக உலகக் கோப்பையை வென்றது. இந்திய அணிக்கேப்டன் தோனி ஆட்டநாயகன் விருதையும், யுவராஜ்சிங் தொடர்நாயகன் விருதையும் வென்றனர். வெற்றி பெற்றதும் அணி வீரர்கள் வெற்றிக்கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மூத்த வீரர் சச்சின் டெண்டுல்கரை தோளில் சுமந்து மைதானத்தை வலம் வந்தனர். தற்போது இந்திய வீரர் மயங்அகர்வாலோடு நடந்த ஒரு இணையதள உரையாடலில் இந்திய அணியின் தற்போதைய கேப்டன் விராட்கோலி சச்சினை தோளில் சுமந்து வந்ததற்கான காரணத்தை பகிர்ந்துள்ளார்.

அதில் அவர், "இது மூத்த வீரரான சச்சினுக்கு இளம் வீரர்கள் நாங்கள் கொடுத்த கவுரம். உலக கோப்பையை வென்றதும் நான் உட்பட அனைவரும் மிகவும் மகிழ்ச்சியில் இருந்தோம். அந்ததொடர் முழுவதும் எங்களது முழுக்கவனமும் சச்சின் மீதுதான் இருந்தது. காரணம் அதுதான் அவருடைய கடைசி உலகக்கோப்பை. அவருடைய கடந்தகால பங்களிப்பு என்பது அளவிட முடியாதது. இதுவெல்லாம்தான் அவரை தோளில் தூக்கி சுமந்ததற்கான காரணம்" என்றார்...

virat kohli Sachin Tendulkar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe