தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில் பலருக்கும் ஆச்சரியமான விஷயம், ரோஹித் சர்மா தொடக்க வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்ததே.

virat kohli about rohit sharma place in test squad

Advertisment

Advertisment

முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் தொடங்கும் நிலையில் இந்திய அணியின் கேப்டன் கோலி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் டெஸ்ட் அணியில் ரோஹித் ஷர்மாவின் ஆட்டம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், "ரோஹித் சர்மாவை டெஸ்ட் போட்டிகளில் தொடக்க வீரராகக் களமிறக்கலாம் என்ற யோசனை நீண்ட நாட்களாக இருந்தது.

ஆனால் அதற்கான சூழ்நிலை ஏற்படவில்லை. ஆனால் இப்போது ஏற்பட்டுள்ளது. எனவே முயற்சி செய்யலாம் என முடிவெடுத்துள்ளோம். இந்திய அணிக்காக சேவாக் எப்படிச் செய்தாரோ, அதேபோல ரோஹித் இந்திய அணியை வழிநடத்தி கூட்டிச்செல்ல வேண்டும். ரோஹித் சர்மா நிச்சயம் புஜாராவின் பாதையைப் பின் தொடரமாட்டார். ரோஹித் தனது இயல்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம்" என தெரிவித்தார்.