Advertisment

விராட் கோலி - டிவில்லியர்ஸ் ஜோடி படைத்த புதிய சாதனை!

Virat Kohli

13-வது ஐ.பி.எல் தொடரின் 28-வது லீக் போட்டி நேற்று இரவு ஷார்ஜாவில் நடைபெற்றது. இப்போட்டியில் கொல்கத்தா அணி பெங்களூரு அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரின் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 194 ரன்கள் குவித்தது. 195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரின் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 112 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இப்போட்டியில், விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளது.

Advertisment

தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஆட்டமிழந்த பிறகு, மூன்றாவது விக்கெட்டிற்கு விராட் கோலி மற்றும்டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தனர். 12.3-வது ஓவரில் இணைந்த இந்த ஜோடி, இறுதிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 100 ரன்கள் குவித்தது. இதன்மூலம், அதிக முறை ஜோடி சேர்ந்து 100 ரன்கள் குவித்த இணை என்ற சாதனை விராட் கோலி மற்றும் டிவில்லியர்ஸ் வசமாகியுள்ளது. இது இருவரும் இணைந்து அடித்த 10-வது சதம் ஆகும். விராட் கோலி-கெயில் ஜோடி 9 சதங்களுடன் இப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.

Advertisment

rcb AB DeVilliers virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe