Advertisment

கோலியை வீழ்த்திய பும்ரா... 

ஆர்சிபி பவுலர்களின் மாஸ் பவுலிங், கோலி-டி வில்லியர்ஸ் ஆகியோரின் கலக்கலான பேட்டிங்கால் வெற்றியை நோக்கி சென்று கொண்டிருந்தது ஆர்சிபி. ஆனால் டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் பும்ராவால் அது தோல்வியில் முடிந்தது.

Advertisment

mi9

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

பரபரப்பான போட்டியில் 2 தவறான முடிவுகளை நடுவர்கள் வழங்கினார்கள். 19-வது ஓவரில் பும்ரா வீசிய சரியான பந்தை அகலப்பந்தாக அறிவித்தார் நடுவர். 20-வது ஓவரின் கடைசி பந்தில் 7 ரன்கள் தேவை என்றபோது மலிங்கா நோ பால் வீச, நடுவர் அதை கவனிக்க தவறினார். இது பெரும் சர்ச்சையை உருவாக்கியது. ஒருவேளை அது பிரீ-ஹிட்டாக இருந்தால் ஆர்சிபி வெற்றி பெற்றிருக்க வாய்ப்புகள் அதிகம்.

உலகின் நம்பர் 1 பவுலரான ஜஸ்ப்ரிட் பும்ரா ஐ.பி.எல். தொடரில் விராத் கோலியின் விக்கெட்டை எடுப்பதில் முனைப்பாக இருந்தார். “உலகின் சிறந்த பந்துவீச்சாளரா நான்? இன்னும் இல்லை. நான் இன்னும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனை அவுட் செய்ய வேண்டும். விராத் கோலி, நான் வருகிறேன். இந்த முறை நீங்கள் என் அணியில் இல்லை.” என்று பும்ரா ஐ.பி.எல். ப்ரோமோ ஒன்றில் கூறியிருந்தார். பும்ராவின் முதல் ஓவரில் 3 பவுண்டரிகள் அடித்து அசத்தினார் கோலி. ஆனால் அவரின் அடுத்த ஓவரில் ஆட்டமிழந்தார் கோலி.

இதற்கு முன்னர் வரை டி வில்லியர்ஸ் ஐ.பி.எல். போட்டிகளில் 4 முறை குருனல் பாண்டியாவின் பந்துவீச்சை சந்தித்துள்ளார். அந்த 4 முறையும் அவரின் பந்து வீச்சில் ஆட்டமிழந்துள்ளார். டி வில்லியர்ஸ்க்கு எதிராக குருனல் பாண்டியாவின் பந்துவீச்சு சராசரி 8ஆக இருந்தது. இந்தநிலையில் குருனல் பாண்டியாவின் பந்துவீச்சில் அதிக ரிஸ்க் எடுக்காமல் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து விளையாடினார் டி வில்லியர்ஸ்.

kholi

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

போட்டி பெரும்பாலும் ஆர்சிபி அணியின் பக்கம் இருந்தது. ஆனால் இறுதி ஓவர்களில் பும்ரா வசம் இருந்த 3 ஓவர்கள் ஆட்டத்தை மும்பை அணி பக்கம் திருப்பியது. முதல் ஓவரில் 12 ரன்கள் கொடுத்த பும்ரா, அடுத்த 3 ஓவர்களில் வெறும் 8 ரன்களை மட்டுமே கொடுத்தார். மலிங்கா மற்றும் ஹர்திக் பந்துவீச்சை விளாசிய டி வில்லியர்ஸ் பும்ரா பந்தில் பெரிய ஷாட்களை அடிக்க முடியவில்லை. இதுதான் ஆட்டத்தின் திசையை மாற்றியது.

மும்பை அணியின் பிளஸ் &மைனஸ்

டி காக், ரோஹித், சூர்யா குமார் யாதவ், யுவராஜ் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளனர். பாண்டியா சகோதரர்கள், பொல்லார்ட் போன்ற 3 பெரிய ஹிட்டர்கள் 12-வது ஓவர் வரை பெரும்பாலான போட்டிகளில் களமிறங்காதது அணிக்கு பெரிய மைனஸ். ஸ்பின்னர்களை விளாசும் யுவராஜ், பாஸ்ட் பவுலிங்கில் அதிகம் தடுமாறுகிறார். டெத் ஓவர்களில் பும்ரா தவிர அச்சுறுத்தும் பவுலர்கள் இல்லை. மலிங்கா பழைய பார்மில் இல்லை.

ஆர்சிபி அணியின் பிளஸ் &மைனஸ்

ஒவ்வொரு முறையும் சொதப்பும் ஆர்சிபி அணியின் பவுலிங், நேற்று அசத்தியது. வலுவான பேட்டிங் கொண்ட மும்பை அணியை கட்டுப்படுத்தியது ஆர்சிபி அணியின் பவுலிங் யூனிட். இது பெரிய பிளஸ். ஆனால் பேட்டிங்கில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரை அளவுக்கு அதிகமாக சார்ந்துள்ளது. ஒவ்வொரு சீசனிலும் மற்ற பேட்ஸ்மேன்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்த தவறுகிறது ஆர்சிபி அணி. நல்ல பேட்ஸ்மேன்கள் இருந்தும் சொதப்புவது அணிக்கு பெரிய மைனஸ்.

ipl 2019 royal challengers bengallore Mumbai Indians
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe