
இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கும், நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் கடந்த 2017 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த வருட இறுதியில், அனுஷ்கா - விராட் இணை, தங்களுக்கு ஜனவரிமாதம், குழந்தை பிறக்கப் போவதாக தெரிவித்திருந்தனர்.
கடந்த ஜனவரி11 ஆம் தேதி அனுஷ்கா - விராட் இணைக்குபெண் குழந்தைபிறந்தது. இருப்பினும் குழந்தையின் புகைப்படங்கள் இதுவரை வெளிவரவில்லை. இந்த நிலையில் தானும்விராட் கோலியும் குழந்தையைக் கொஞ்சும் புகைப்படத்தை தனதுசமூகவலைதள பக்கத்தில் அனுஷ்கா சர்மா பகிர்ந்துள்ளார்.
மேலும் தங்கள் குழந்தைக்கு ‘வாமிகா’ எனபெயரிட்டிருப்பதாகவும் அனுஷ்கா சர்மாதெரிவித்துள்ளார். அனுஷ்காசர்மாபதிவிட்டஅந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருவதோடு, அனுஷ்கா- விராட் இணைக்கு வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)