இந்தியா-தென் ஆப்பிரிக்கா இடையிலான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து,149 ரன்களைக் குவித்தது. தொடர்ந்து இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி கோலியின் அதிரடியால் 3 விக்கெட்டுகளை இழந்து 19 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்தநிலையில் போட்டியின்போது கேப்டன் கோலி,தேவையில்லாமல் ஸ்டெம்பை உடைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது. இந்தநிலையில் போட்டியின்போது கேப்டன் கோலி, கோபத்தில் ஸ்டெம்பை உடைத்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.

Advertisment

தென் ஆப்ரிக்க அணி பேட்டிங் செய்த போது, போட்டியின் 10-வது ஓவரில் டெம்பா பாவுமா அடித்த பந்தை பவுண்டரி லைனில் இருந்த ஸ்ரேயாஸ் பொறுமையாக தடுக்க, பாவுமா மற்றும் குயிண்டன் டி காக் கூடுதலாக ஒரு ரன் எடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த கோலி,ஸ்ரேயாஸ் வீசிய பந்தை வாங்கி தேவையில்லாமல் ஸ்டெம்பை அடித்தார். இறுதியில் இரண்டாவதாக பேட்டிங் செய்த இந்திய அணி கோலியின் அதிரடியால் 3 விக்கெட்டுகளை இழந்து, 19 ஓவரில் 151 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.