Advertisment

வைரலாகும் வாமிகாவின் புகைப்படம்; விராட்- அனுஷ்கா விடுக்கும் கோரிக்கை

virat - anushka

Advertisment

விராட் கோலி- அனுஷ்கா சர்மா இணை, தங்களது குழந்தையின் புகைப்படத்தை வெளியிடாமல் இருந்து வருகின்றனர். இந்த நிலையில், நேற்று நடைபெற்ற தென்னாப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியைகாண வந்திருந்த அனுஷ்கா சர்மா, வாமிகாவையும் அழைத்து வந்திருந்தார். அப்போது வாமிகாவைகேமராக்கள் படம் பிடித்தன.

இதனைத்தொடர்ந்து,போட்டியின்போது எடுக்கப்பட்ட வாமிகாவின் புகைப்படங்கள், இணையதளத்தில் வைரலாகின. இந்தநிலையில் வாமிகாவின் புகைப்படங்களைப் பகிர வேண்டாம் என விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாகஅவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எங்கள் மகள் நேற்று படம்பிடிக்கப்பட்டதையும், பிறகு அந்தப் படங்கள் பரவலாகப் பகிரப்பட்டதையும் நாங்கள் அறிந்தோம். கேமரா எங்களைப் படம்பிடித்தது எங்களுக்கு தெரியாது என்பதை அனைவருக்கும் தெரிவிக்க விரும்புகிறோம். இந்த விஷயத்தில் எங்களின் நிலைப்பாடும் கோரிக்கையும் முன்பு இருந்தபடியே உள்ளது. நாங்கள்ஏற்கனவே விளக்கிய காரணங்களுக்காக, வாமிகாவின் படங்கள் கிளிக் செய்யப்படாமல்இருந்தால், படங்கள் வெளியிடப்படாமல் இருந்தால் நாங்கள்மிகவும் நன்றி பாராட்டுவோம்" எனவும் தெரிவித்துள்ளனர்.

Advertisment

தங்கள் குழந்தைக்குத் தனியுரிமையை வழங்க விரும்புவதாகவும்,ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி ஒரு சுதந்திரமான வாழ்க்கையைவாழ தங்கள் குழந்தைக்கு வாய்ப்பளிக்க விரும்புவதாகவும் விராட் கோலி-அனுஷ்கா சர்மா இணை ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe