Advertisment

விராட்டின் சந்தேகம்; பந்தயத்திற்கு தயாரான டிவில்லியர்ஸ்! - வைரலாகும் உரையாடல்!

virat - abd

உலகம் முழுவதும் ரசிகர்களைக் கொண்டுள்ள ஐபிஎல் தொடர், வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்குகிறது. கரோனாபரவலால் பயணக்கட்டுப்பாடுகள், மாற்றப்பட்ட ஹோம்-கிரவுண்டுகள்எனப் பல்வேறு மாற்றங்களோடு, இந்தாண்டின் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்தியா - இங்கிலாந்து இடையேயான ஒருநாள் தொடர் நேற்று முடிவடைந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் தத்தம் ஐ.பி.எல் அணிகளோடுஇணைந்து வருகின்றனர்.

Advertisment

இந்தநிலையில்விராட் கோலி, தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து "ஓய்வு நாட்கள் கிடையாது. இனி எல்லாமே வேகத்தைப் பற்றியதுதான்" எனக் கூறி #ipl என்றஹாஸ்டக்கையும் பதிவிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த டிவில்லியர்ஸ், உங்களது ஃபார்மைவிரும்புகிறேன். அணியோடு இணைவதற்கு அனைத்தையும் பேக் செய்துவிட்டேன்" எனத் தெரிவித்தார்.

Advertisment

இதனையடுத்துவிராட் கோலி, "நீங்கள் இன்னும் விக்கெட்டுக்கு இடையில் வேகமாக இருப்பீர்கள்(வேகமாக ரன் ஓடுவீர்கள்) என நம்புகிறேன்" என்றார். இதற்குப் பதிலளித்த ஏ.பி.டிவில்லியர்ஸ், நாளைக்கு ஓட்டப்பந்தயம் வைத்து அதனைத் தெரிந்துகொள்ளலாம்எனக் கூறியுள்ளார். கோலி- டிவில்லியர்ஸின் இந்த உரையாடல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

IPL ipl 2021 AB DeVilliers virat kohli
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe