2020 ஆம் ஆண்டு டோக்கியோ நகரில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க இந்திய மல்யுத்த வீராங்கனையான வினேஷ் போகாட் தகுதிபெற்றுள்ளார்.

Advertisment

vinesh phogat qualified for olympics 2020 from india

25 வயதான வினேஷ் போகாட் கஜகஸ்தான் நாட்டில் நடந்து வரும் உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இன்று நடந்த போட்டியில் 53 கிலோ எடை பிரிவில் உக்ரைன் நாட்டின் யூலியா கால்வாட்ஜை என்பவரை எதிர்கொண்டார். அவரை 5-0 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தினார். இதன்மூலம் வெண்கல பதக்கத்திற்கான போட்டிக்கு அவர் தகுதி பெற்றதோடு, அடுத்த ஆண்டு ஒலிம்பிக் தொடருக்கும் தகுதி பெற்றுள்ளார்.