Advertisment

விஜய் சங்கருக்கு காயம்... இந்திய அணியில் சந்தேகம்...

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர், வரும் 30 ஆம் தேதி இங்கிலாந்தில் தொடங்குகிறது. இதற்கான போட்டியில் பங்குபெறும் அணிகள் அங்கு சென்றுள்ளன. இதனையடுத்து நேற்று முதல் உலகக்கோப்பைக்கான பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இதில் நேற்று நடந்த பயிற்சி ஆட்டங்களில் இலங்கை- தென்னாப் பிரிக்கா, ஆப்கானிஸ்தான் - பாகிஸ்தான் அணிகள் மோதின.

Advertisment

vijay sankar got injured in worldcup practice

இந்நிலையில் இன்றையை ஆட்டத்தில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இன்று இந்த ஆட்டம் நடைபெறும் நிலையில் நேற்றைய வலை பயிற்சியின் போது உலகக்கோப்பை அணியில் தேர்வாகியுள்ள தமிழக வீரர் விஜய் சங்கருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த அவர் விளையாட முடியாமல் பயிற்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில் இன்றைய பயிற்சி ஆட்டத்தில் அவர் விளையாடுவர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

Advertisment

team india icc worldcup 2019
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe