நடந்துவரும் ஐபிஎல் தொடரில் இன்னும் மூன்று ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இந்த ஆண்டின் புள்ளி பட்டியலில் கோலி தலைமையிலான ஆர்.சி.பி அணி கடைசி இடத்தை பிடித்துள்ளது.

Advertisment

vijay mallya criticize rcb team in his tweet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

இந்நிலையில் ஆர்.சி.பி அணியின் உரிமையாளரான விஜய் மல்லையா பெங்களூரு அணியை விமர்சித்து ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். கோடிக்கணக்கில் கடன் வாங்கி இந்திய அரசாங்கத்தை ஏமாற்றி தற்போது லண்டனில் வசித்து வருகிறார் விஜய் மல்லையா. இந்நிலையில் தனது கடைசி போட்டியை முடித்த பின்பு ஆர்.சி.பி அணியின் கேப்டனான கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்தும், அடுத்த ஆண்டு சிறப்பாக விளையாடுவோம் எனவும் பதிவிட்டார்.

இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த மல்லையா, "இது ஒரு சிறந்த அணி என்பது வெறும் பேப்பரில் எழுதி பார்க்கும்போது மட்டும்தான். இந்த மரக் கரண்டியால் தான் நான் அழிந்தேன்" என பதிவிட்டுள்ளார். பெங்களூரு அணியை மரக் கரண்டியுடன் மல்லையா ஒப்பிட்ட இந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது. மரக்கரண்டி என்பது ஆங்கிலத்தில் ஒரு செயல் அல்லது விளையாட்டில் தோற்ற நபரையோ அணியையோ குறிப்பிட பயன்படுத்தும் ஒரு வார்த்தை ஆகும்.

Advertisment