Advertisment

ஆர்.சி.பி புதிய லோகோ... விஜய் மல்லையாவின் கிண்டல்....

கோலி தலைமையில், சிறந்த பேட்ஸ்மேன்கள், பந்துவீச்சாளர்கள் என ஐபிஎல் தொடரின் பலம் மிகுந்த ஒரு அணியாக திகழ்ந்து வருகிறது ஆர்.சி.பி. சிறந்த வீரர்கள் இருந்தும் இதுவரை ஐபிஎல் கோப்பையை ஒருமுறை கூட இந்த அணி வென்றதில்லை. இதனை வைத்து அந்த அணியை இணையவாசிகள் கிண்டல் செய்வது வாடிக்கை. தற்போது அதேபோன்று அந்த அணியின் முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையாவும் அந்த அணியை கிண்டல் செய்துள்ளார்.

Advertisment

vijay mallya about rcb logo and ipl cup

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

அடுத்த மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில், பெங்களூரு அணிக்கான புதிய லோகோ நேற்று வெளியிடப்பட்டது. இந்நிலையில் இதனை கிண்டல் செய்யும் விதமாக விஜய் மல்லையா ட்வீட் செய்துள்ளார். புதிய அத்தியாயம் தொடங்குகிறது என ஆர்சிபி அணி வெளியிட்ட வீடியோவில் கமெண்ட் செய்துள்ள மல்லையா, "நல்லது. ஆனால் கோப்பையை வெல்லுங்கள்" என தெரிவித்துள்ளார். மேலும், மற்றொரு பதிவில் "சிங்கம்போல கர்ஜியுங்கள். ஆனால் ஐபிஎல் கோப்பையை சொந்த வீடான பெங்களூருக்கு கொண்டு வாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

vijay mallaya rcb ipl 2020
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe