தமிழக வீரரான வருண் சக்ரவர்த்தி நடப்பு ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடி வருகிறார். சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது, தோனி விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார். தற்போது, அவர் கையில் குத்தியிருக்கும் டாட்டூ வைரலாகி வருகிறது.
கொல்கத்தா அணி தன்னுடைய அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில், அவ்வணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்ட புகைப்படத்தைப் பகிர்ந்திருந்தது. அந்தப் புகைப்படத்தில் இருந்த வருண் சக்ரவர்த்தியின் கையில், நடிகர் விஜய் 'தலைவா' படத்தில் கொடுத்த ஒரு போஸினை டாட்டூ குத்தியுள்ளார். அதைக் கண்ட விஜய் ரசிகர்கள் அந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.