இங்கிலாந்து நாட்டில் நடந்துவரும் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி 336 ரன்கள் எடுத்தது. 337 என்ற வெற்றி இலக்குடன் பாகிஸ்தான் விளையாடிய போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் 40 ஓவராக குறைக்கப்பட்டதுடன் இலக்கும் மாற்றியமைக்கப்பட்டது. ஆனால் பாகிஸ்தான் அணி இலக்கை எட்ட முடியாமல் 89 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இந்த ஆட்டத்தில் தோனி சிறப்பிக்க விளையாடாமல் ரசிகர்களின் கவனத்தை பெற தவறிய போதிலும், அவரது மகள் ஸிவா தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். இந்திய இளம் வீரர் ரிஷப் பந்த் மற்றும் ஸிவா போட்டி நடைபெறும் மைதானத்தில் விளையாடிய காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.