Advertisment

ரசிகர்களைக் கவர்ந்த தோனி, ஸிவாவின் விளையாட்டு வீடியோ...

video of dhoni playing with ziva goes viral

இந்தியக்கிரிக்கெட் வீரர் தோனி அவரது மகளுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்துள்ளது.

Advertisment

கரோனா காரணமாக விளையாட்டுப் போட்டிகள் அனைத்தும் நிறுத்திவைக்கப்பட்டுள்ள சூழலில், பெரும்பாலான விளையாட்டு வீரர்கள் தங்களது நேரத்தைக் குடும்பத்தினருடன் செலவழித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனி, தனது பண்ணை வீட்டில் தனது மகள் மற்றும் நாயுடன் விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

உலகக்கோப்பைக்குப் பிறகு எந்த கிரிக்கெட் தொடரிலும் பங்கேற்காத தோனி தனது குடும்பத்துடன் ஓய்வெடுத்து வருகிறார். நீண்ட காலமாகக் களத்தில் தோனியைப் பார்க்காமல் தவித்துவந்த ரசிகர்கள் ஐபிஎல் தொடரில் அவரது அதிரடி ஆட்டத்தைக் காணலாம் என எண்ணியிருந்தனர். ஆனால் கரோனா பரவல் காரணமாக ஐபிஎல் தொடரும் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் யாரும்ரசிகர்களுடன் நேரலையில் பேசினாலும், ரசிகர்களின் முக்கியக் கேள்வி தோனி எப்போது விளையாடுவார் என்பதாகவே உள்ளது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூகவலைத்தள பக்கத்தில் தோனி தனது வீட்டில் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

CSK Dhoni
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe