Advertisment

பிரபல முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திடீர் தற்கொலை...

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.பி. சந்திரசேகர் நேற்று இரவு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

Advertisment

vb chandrasekar passed away

57 வயதான இவர் சென்னை மயிலாப்பூர் விஸ்வேஸ்வர்புரத்தில் வசித்து வந்தார். நேற்று இரவு தனது அறையில் இருந்து நீண்ட நேரம் சந்திரசேகர் வெளியே வராததால் அவரது குடும்பத்தினர் கதவை தட்டினர். கதவு திறக்கப்படாததால் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளனர். அப்போது வி.பி. சந்திரசேகர் மின்விசிறியில் தூக்கு போட்டு பிணமாக தொங்கியுள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று கதவை உடைத்து உள்ளே சென்று சந்திரசேகரின் உடலை மீட்டனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அவரது உடல் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Advertisment

team india
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe