உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பை; சாம்பியன் பட்டம் வென்றார் பிரக்ஞானந்தா!

prayananda

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற சர்வதேச செஸ் போட்டியில் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்

உஸ்பெகிஸ்தான் வீரர் நோடி - பெக்-ஐ வீழ்த்தி பிரக்ஞானந்தா இந்த கோப்பையை வென்றுள்ளார். தமிழ்நாட்டை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றியின் மூலம் செஸ் வரலாற்றில் முதல் முறையாக உலக செஸ் தரவரிசையில் முதல் 5 இடங்களுக்குள் 2 தமிழர்கள் இடம் பெற்றிருப்பது இதன் மூலமாக உறுதியாகியுள்ளது. அதே சமயம் உலக செஸ் தரவரிசையில் குக்கேஷை 5 வது இடத்திற்கு  தள்ளி 4 வது இடத்திற்கு பிரக்ஞானந்தாமுன்னேறியுள்ளார். மேலும் உஸ்பெகிஸ்தான் செஸ் கோப்பையை வென்று சாம்பியன் பெற்ற பிரக்ஞானந்தாவுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். 

 

champion Chess Praggnanandhaa uzbekistan
இதையும் படியுங்கள்
Subscribe