இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரரான ரிஷப் பந்த், இளைஞர்களிடையே விளையாட்டையும், ஆரோக்கியத்தையும் ஊக்குவிப்பதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளியிட்டுள்ளார்.
ஏற்கனவே உத்தரகாண்ட் அரசு, இந்திய மகளிர் ஹாக்கி அணி நட்சத்திரமானவந்தனா கட்டாரியாவைபெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறையின் தூதுவராக நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது.