Advertisment

கண்டிப்பாக உலககோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவேன் - மூத்த வீரர் உறுதி!

தான் மீண்டும் இந்திய அணிக்கு திரும்பி, உலக கோப்பை போட்டிகளில் விளையாடுவேன் என்று இந்திய அணியின் மூத்த வீரர் ராபின் உத்தப்பா தெரிவித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்திய அணியில் இடம்பிடித்து வந்த அதிரடி ஆட்டக்காரரான ராபின் உத்தப்பா, சில ஆண்டுகளாக அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வந்தார். 46 ஒருநாள் போட்டிகள், 13 டி20 போட்டிகளில் விளையாடி அனுபவம் பெற்றுள்ள அவர் அணியில் இடம் பெறுவதற்கான முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

Advertisment

n

இந்நிலையில் இணையதளம் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், "இந்த 34 வயதிலும் சாதிக்க வேண்டும் என்ற தீ என்னுள் எரிந்து கொண்டுதான் இருக்கிறது. அதற்கு கடவுளின் ஆசி மற்றும் கருணை மிக முக்கியம். அந்த நம்பிக்கையின் காரணமாகவே நான் வரும் உலக போப்பையில் கண்டிப்பாக இடம் பெறுவேன் என்று நம்புகிறேன். வாய்ப்பு கிடைக்காது என்று யாராலும் சொல்ல முடியாது. இருக்கும் சிறிதளவு வாய்ப்பை கண்டிப்பாக நான் எதிர்பார்க்கிறேன்" என்றார்.

Advertisment

cricket
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe