இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகள் சில வாரங்களாக நடைபெற்று வருகிறது. சில நாட்கள் முன்பு நடைபெற்ற லீஸ்செஸ்டெர்ஷைர் - கிலாமோர்கன் அணிகள் மோதியுள்ளன. கடந்த 19 ஆம் தேதி நடந்த இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் மார்க் காஸ்கிரோவ் ரன் அவுட் ஆன விதத்தால் ரசிகர்களின் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளார். மார்க் காஸ்கிரோவ் அடித்த பந்து பக்கத்தில் இருந்த ஃபீல்டரின் கையில் சிக்கியுள்ளது.

Advertisment
Advertisment

அதன் பிறகும் அவர் ரன் எடுக்க முயற்சிக்க, என்ன செய்கிறோம் என உணர்வதற்குள் அவரை எதிரணியினர் ரன் அவுட் செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ள இந்த வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஃபீல்டர் கையில் பந்து இருப்பதைப் பார்த்தும் அவர் எப்படி ரன் எடுக்க முயற்சித்துள்ளார், இது ப்ளே ஸ்டேஷனில் ரன் ஓடும் பட்டனை தவறாக அழுத்தியது போல உள்ளது என ரசிகர்கள் அவரை கலாய்த்து வருகின்றனர்.