Two others were injured; Ishan Kishan to replace Rahul; Selection committee in confusion

Advertisment

லக்னோ அணிக்கு கேப்டனாக செயல்பட்ட கே.எல். ராகுலுக்கு மே 1 ஆம் தேதியில் நடந்த பெங்களூர் அணியுடனான போட்டியில் ஃபீல்டிங் செய்தபோது காலில் காயம் ஏற்பட்டது. இதன் பின் சென்னை அணியுடனான போட்டியிலும் ராகுல் விளையாடவில்லை. ராகுலின் விலகலைத் தொடர்ந்து லக்னோ அணிக்கு ஆல்ரவுண்டரான குருணால் பாண்டியா கேப்டனாக செயல்பட்டார்.

காலில் ஏற்பட்ட காயம் தீவிரமடைந்துள்ளதால் நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகுவதாக ராகுல் அறிவித்தார். ராகுலின் விலகலைத் தொடர்ந்து எஞ்சியுள்ள போட்டிகளிலும் லக்னோ அணியின் கேப்டனாக குருணால் பாண்டியா செயல்படுவார் என அறிவிக்கப்பட்டது. அதேபோல் இந்தாண்டில் நடைபெற இருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்தும் காயம் காரணமாக கே.எல்.ராகுல் விலகினார். ஏற்கனவே ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் ஐயர், பும்ரா ஆகியோர் அணியில் இடம்பெறாத நிலையில் தொடர்ந்து கே.எல்.ராகுலும் அணியில் இருந்து காயம் காரணமாக விலகியது அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது.

ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் ரிஷப் பண்ட் இல்லாததை ஈடு செய்யும் விதமாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள ரஹானேவை போல் கே.எல்.ராகுல் வெளியேறியதை ஈடு செய்ய யார் அணியில் எடுக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது. இந்நிலையில் கே.எல்.ராகுலுக்கு பதில் இஷான் கிஷன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Advertisment

Two others were injured; Ishan Kishan to replace Rahul; Selection committee in confusion

மேலும் பந்துவீச்சுப் பயிற்சியின் போது காயமடைந்த ஜெயதேவ் உனத்கட் மற்றும் பெங்களூர் கொல்கத்தா இடையே நடைபெற்ற போட்டித் தொடரின் போது காயமடைந்த உமேஷ் யாதவ் ஆகியோர் டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதில் நிச்சயமற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ குறிப்பிட்டுள்ளது. மேலும் இருவீரர்களும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறார்கள் என்றும் இருவரின் பங்கேற்பு குறித்தும் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்டேண்ட் பை வீரர்களாக ருதுராஜ், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான இந்திய அணி, “ரோஹித் ஷர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, கே.எஸ். பாரத் (Wk), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், முகமதுஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், இஷான் கிஷன்.

Advertisment

காத்திருப்பு வீரர்கள்: ருதுராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ்.