Advertisment

இரு சதங்கள்; 399 ரன்கள்! - ஆஸி வீரர்கள் அபாரம்!  

Two centuries.. 399 runs! Aussies are great!

Advertisment

ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டியின் 24வது லீக் ஆட்டம் இன்று (25ம் தேதி) டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா - நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி மிட்சல் மார்ஷலும், டேவிட் வார்னரும் களமிறங்கினர். இந்த ஜோடி 28 ரன்கள் எடுத்திருந்த நிலையில், மிட்சல் மார்ஷல் 9 ரன்களில் அவுட் ஆனார். பிறகு ஸ்டீவன் ஸ்மித்துடன் இணை சேர்ந்த டேவிட் வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 ரன்களை விளாசி தனது விக்கெட்டை இழந்தார். ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்னில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் ஆஸ்திரேலியா அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 399 ரன்களை அடித்தது.

ஆஸ்திரேலியா அணியில், டேவிட்வார்னர் 93 பந்துகளில் 11 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 104 ரன்கள், ஸ்டீவன் ஸ்மித் 68 பந்துகளில் ஒரு சிக்சர், 9 பவுண்டரிகளுடன் 71 ரன்கள், மேக்ஸ் வெல் 44 பந்துகளில் 8 சிக்சர்கள், 9 பவுண்டரிகளுடன் 106 ரன்களைக் குவித்தார்.

Advertisment

நெதர்லாந்து அணியில், லோகன் வான் பீக் 4 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல், பாஸ் டி லீடே 2 விக்கெட்களையும், ஆர்யன் டட் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

Australia
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe