danc christian and wife

ஐபிஎல் தொடரில் நேற்று (11.10.2021) நடைபெற்ற எலிமினேட்டர் ஆட்டத்தில், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. கடைசி ஓவர்வரை பரபரப்பாக சென்ற இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணி, பெங்களூர் அணியை வீழ்த்தியது. இதனால் பெங்களூர் அணி ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறியது.

Advertisment

இந்தப் போட்டியில் பெங்களூர் அணி வீரர் டேன் கிறிஸ்டியன் பந்துவீச்சில் சுனில் நரைன் தொடர்ந்து மூன்று சிக்ஸர்களை விளாசியது, கொல்கத்தா அணி வெல்ல முக்கிய காரணமாக அமைந்தது. இதன் காரணமாக கோபமடைந்த சில பெங்களூரு ரசிகர்களும், சில விராட் கோலி ரசிகர்களும் டேன் கிறிஸ்டியனின் மனைவியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தின் கமெண்ட்களில் டேன் கிறிஸ்டியனையும், அவரது மனைவியும் வசைபாடியுள்ளனர்.

Advertisment

இதனையடுத்து டேன் கிறிஸ்டியன், பெங்களூர் அணி ரசிகர்களுக்கு தனது மனைவியை இந்த விவகாரத்திலிருந்து விட்டுவிடுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "எனது துணையின் இன்ஸ்டாகிராம் கமெண்ட் பகுதியைப் பார்த்தேன். இன்று (நேற்று) எனக்கு சிறப்பான ஆட்டமாக அமையவில்லை. ஆனால், அதுதான் விளையாட்டு. இருப்பினும் இதிலிருந்து அவரை விட்டுவிடுங்கள்" என பதிவிட்டுள்ளார்.