Advertisment

மே.இந்தியத் தீவுகளுடனான சுற்றுப் பயணம்; இந்திய அணி அறிவிப்பு

Tour with West Indies; Indian team announcement

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஜூன் 7 ஆம் தேதி இங்கிலாந்தில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து உடனான ஆஷஸ் தொடரில் விளையாடி வருகிறது. இந்திய அணி அடுத்தபடியாக மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறது. மேற்கிந்திய தீவுகள் அணியுடன் இரண்டு டெஸ்ட் போட்டிகள், 3 ஒரு நாள் போட்டிகள், 5 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது. ஜுலை 12 ஆம் தேதி முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்கான வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய ஒருநாள் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன் (WK), இஷான் கிஷன் (WK), ஹர்திக் பாண்டியா (விசி), ஷர்துல் தாக்கூர், ஆர் ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனத்கட், முகமதுசிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.

Advertisment

டெஸ்ட் அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரஹானே, கேஎஸ் பரத், இஷான் கிஷன் (வி.கே.), ஆர்.அஷ்வின், ஆர்.ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமதுசிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.

indvswi
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe