"இந்திய அணிக்காக விளையாடியதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது" இளம் வீரர் குறித்து ஆஸி. முன்னாள் வீரர் டாம் மூடி கருத்து! 

Tom Moody

இந்திய அணிக்காக விளையாடியதில்லை என்பது ஆச்சரியமாக உள்ளது என சூர்யகுமார் யாதவ் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் நடைபெற்ற 13-ஆவது ஐபிஎல் தொடரில் இளம் வீரர்கள் பலர் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி, ரசிகர்களின் கவனத்தை தங்கள் பக்கம் திருப்பினர். அவர்களில் மும்பை அணிக்காக விளையாடிய இளம் வீரரான சூர்யகுமார் யாதவ் மிக முக்கியமானவர். நடப்பு ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ், 4 அரை சதங்களுடன் 480 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இந்திய அணியில் சூர்யகுமார் யாதவின் பெயர் இடம்பெறாததையடுத்து, பல முன்னணி வீரர்களும் பிசிசிஐ மீது அதிருப்தியை வெளிப்படுத்தினர். ரசிகர்கள், முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் எனப் பலரது கவனத்தையும் ஈர்த்த சூர்யகுமார் யாதவ் குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் டாம் மூடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில் அவர், "சூர்யகுமார் யாதவ் மும்பை அணிக்காக மூன்றாவது இடத்தில் களமிறங்கினார். அவர் இந்திய அணிக்காக விளையாடியதே இல்லை என்பதை நினைக்கும்போது ஆச்சரியமாக உள்ளது. நல்ல கட்டுப்பாட்டுடன் சிறப்பாக பேட்டிங் செய்தார். எந்த சிரமம் இல்லாமல் அதைச் செய்வது போல உள்ளது. என்னைப் பொறுத்தவரை அவர் தரமான கிரிக்கெட் வீரர்" எனக் கூறினார்.

ipl 2020 Suryakumar Yadav
இதையும் படியுங்கள்
Subscribe