2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் ரத்து செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle ||
[]).push({});
2020 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் வரும் ஜூலை 24ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ளதாக திட்டமிடப்பட்டுள்ள நிலையில், கரோனா பரவல் காரணாமாக ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி குழு உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவலின்படி, கரோனா வைரஸ் பாதிப்பு மே மாதத்திற்குள் கட்டுக்குள் வராவிட்டால், டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்தாக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கரோனா பாதிப்பால் 2600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள நிலையில், ஜப்பானில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சூழலில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.