டோக்கியோ ஒலிம்பிக்: இந்திய அணியை வழிநடத்திய மேரிகோம்-மன்பிரீத்சிங்!

team india

ஒலிம்பிக் போட்டிகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்றுவரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படிஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள் இன்றுதொடங்கியுள்ளன.

ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில்,அமெரிக்காவின் முதல் பெண்மணியான ஜில் பைடன் மற்றும்பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். விழாவில் முக்கிய அம்சமாக, ஒலிம்பிக்கில் பங்கேற்கும் நாடுகளின் வீரர்கள் தங்கள் நாட்டு தேசிய கொடியை ஏந்தி அணிவகுத்து சென்றனர்.

இந்த அணிவகுப்பில், குத்துசண்டை ஜாம்பவான்மேரிகோம், ஆண்கள்ஹாக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங்ஆகியோர் இந்திய தேசிய கொடியை ஏந்தியபடி, இந்திய அணியை தலைமைதாங்கி வழிநடத்தினர்.

mary kom olympics 2020 tokyo
இதையும் படியுங்கள்
Subscribe