Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்: இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கத்தை உறுதி செய்தார் லோவ்லினா போர்கோஹெய்ன்!

lovlina borgohain

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டியடோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

Advertisment

இந்நிலையில், பெண்களுக்கான குத்துச்சண்டையில்வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின்லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் இந்தியா பதக்கம் வெல்வது உறுதியாகியுள்ளது.

Advertisment

டோக்கியோ ஒலிம்பிக்கில் அசாம் மாநிலத்திலிருந்து பங்கேற்றஒரே நபர் லோவ்லினா போர்கோஹெய்ன்தான்.மேலும், அசாமிலிருந்து ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொண்ட முதல் பெண் குத்துச்சண்டை வீரரும் லோவ்லினா போர்கோஹெய்ன்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

tokyo olympics lovlina borgohain
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe