ADVERTISEMENT

டோக்கியோ ஒலிம்பிக்ஸ்; ஜப்பானை வீழ்த்திய இந்திய ஆடவர் ஹாக்கி அணி!

05:07 PM Jul 30, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

2020ஆம் ஆண்டு நடைபெற வேண்டிய டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டிகள், கடந்த 23ஆம் தேதி முதல் நடைபெற்றுவருகிறது. இதில் பளு தூக்குதல் போட்டியில் இந்தியாவின் மீராபாய் சானு வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

அதன்தொடர்ச்சியாக பெண்களுக்கான குத்துச்சண்டையில் வெல்டர்வெயிட் பிரிவில் (64 - 69), இந்தியாவின் லோவ்லினா போர்கோஹெய்ன் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார். இந்தநிலையில், மகளிர் ஒற்றையர் பேட்மிண்டனில் காலிறுதி போட்டியில் இந்தியாவின் பி.வி. சிந்து, ஜப்பானின் அகனே யமாகுச்சியை வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தநிலையில் இன்று நடைபெற்ற ஆடவர்களுக்கான ஹாக்கி போட்டியில் இந்திய அணி, ஜப்பான் அணியை 5-3 என்ற கணக்கில் வீழ்த்தியுள்ளது. ஏற்கனவே காலிறுதிக்கு முன்னேறிவிட்ட இந்திய அணி, லீக் ஆட்டத்தில் விளையாடிய ஐந்தில் நான்கு ஆட்டங்களை வென்றுள்ளது. இதில் கடந்த போட்டியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினாவை வீழ்த்தியதும் அடங்கும்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT